பரமக்குடி படுகொலை— ஓர் மீளாய்வு

கண்டன அறிக்கைகள், வெளிநடப்புகள், ஆர்ப்பாட்டங்கள்,
இவையெல்லாம் அடையாளங்களாய் மட்டுமே மிஞ்சுவதற்கு
அதிக காலமில்லை. இன்னும் ஒரு சில வாரங்களில் மற்றொன்றை நோக்கி ஓடத்தொடங்கிவிடுவார்கள்.

மீண்டும் துப்பாக்கிக் குண்டுகள் தாழ்த்தப்பட்டோரின்
உயிர்குடிக்கும்….

பரமக்குடியில் ஆதிக்க சாதிவெறியை அரசே அரங்கேற்றி முடித்திருக்கிறது. அரசின் பயங்கரவாதம் என்பதால் கண்டிக்கிற சிலர் இதே வன்முறையை ஆதிக்கசாதிகள் நிகழ்த்தியிருந்தால்
சாதிக்கலவரம், மக்கள் ஒற்றுமை காப்போம் என்றும், தமிழர் ஒற்றுமை காப்போம் என்றும் அறிக்கை விட்டிருப்பார்கள்.
ஆதிக்க சாதிவெறியர்களை கண்டிப்பதை விட அரசைக் கண்டிப்பது இங்கேயுள்ள அரசியல்வாதிகள் பலருக்கு எளிது.

ஒரு அரசு அதன் குடிமக்களை காக்கை குருவிபோல் சுட்டுக்கொன்றுவிட்டு எந்தச் சலனமுமின்றி நீடிக்கமுடியும் என்றால் அதற்கான காரணம் என்ன?
குறிப்பாக தற்போது நிகழ்ந்த படுகொலையின் வேர் எங்கிருந்து தொடங்குகிறது.

மதுரை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில், வலிமையுள்ள அரசியல் கட்சிகள் என்றால், அதிமுக, திமுக, காங்கிரஸ், வலது இடது கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். இதில் காங்கிரஸ் மட்டும்தான் தன் வலிமையை இழந்திருக்கிறது.

அதிமுகவின் செயலாளர் மொக்கசாமி தேவர், திமுகவின் செயலாளர் அவரது மாமா சிவனாண்டித்தேவர், காங்கிரஸ் செயலாளர் அவரது பங்காளி தவசித்தேவர், பொதுவுடைக்கட்சி செயலாளர் அய்யாவு. அதாவது தவசித்தேவரின் சித்தப்பா.
இதுதான் அங்கிருக்கும் கட்சிகளின் அமைப்பு முறை. (பெயர்கள் உதாரணத்திற்காகவே)

இது இன்று நேற்று தொடங்கியதல்ல அந்தக் கட்சிகள் தோன்றியதிலிருந்து காலங்காலமாய் நீடிக்கும் முறை.
ஊர் என்கிற சாதியமைப்பிற்கு சற்றும் குறையாத வண்ணம்
இந்த கட்சியமைப்புமுறை அந்த மாவட்டங்களில் இன்றும் நீடிக்கிறது.

முத்துராமலிங்கதேவர் ஜெயந்திக்கு கட்சியின் மிகப்பெரிய தலைவர்கள் போவது ஒருபுறமிருக்கட்டும், அந்த ஊர்வலத்தில் மேற்சொன்ன அனைத்து கட்சியினரும் சாதி என்கிற ஒரேஅடிப்படையில் திரண்டுசெல்வதை பார்க்கமுடியும்.

தாழ்த்தப்பட்டோர் தொடக்கத்தில் இந்தக் கட்சிகளின் அணியாக மட்டுமே இருந்தனர். காலப்போக்கில் தங்களுக்கான அங்கீகாரத்தை இந்த அமைப்புகளுக்குள் பெறமுடியாமல்
தனித்துத் திரண்டனர்.

அதில் அரசியல் வழியிலான திரட்சி என்பதை உருவாக்கியதில்
அப்பகுதியில், தியாகி இம்மானுவேல் பேரவைக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும், அருந்ததியர் விடுதலை முன்னணிக்கும்
பெரும் பங்குண்டு.

முதன்முதலாக ஏப்ரல் 14 ஆம் நாள் அம்பேத்கர் பிறந்தநாளன்று
சிறுத்தைகள் அணிவகுப்பு என்பதை விடுதலைச் சிறுத்தைகள் அறிமுகம் செய்தனர். (ஒவ்வொரு தேவர் ஜெயந்திக்கும் கடைகள் அடைக்கப்படுவதும், அடைக்கப்பட்ட கடைகளையும் கல்வீசி தாக்குவதையும் வழக்கமாய் கொண்டிருந்தனர் முக்குலத்தோர்)

சிறுத்தைகள் அணிவகுப்பின் போது, போலீசே கடைகளை அடைக்கச்சொன்னது, ஏதோ நடக்கக்கூடாதது நடக்கப்போவதைப்போன்ற பீதியை திட்டமிட்டு விதைத்தது அரசு.

அரசு மட்டுமா? மக்கள் ஒற்றுமை காப்போம், மதுரை வீதிகளில் சிறுத்தைகள் அணிவகுப்பாம், காட்டுக்குள் இருக்கிற மிருகங்கள் நாட்டுக்குள் வரலாமா? என்று சுவரொட்டி அடித்தார்கள் அய்யாவுத்தேவரின் பொதுவுடைமை வாதிகள்.

அதே வேளையில் மறுபுறத்தில், ஆதிக்க சாதிவெறிக்கெதிராய் தன்னுயிர்தந்த இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் மக்களை மட்டுமன்றி பல்வேறு முற்போக்காளர்களையும் பார்த்திபனூரில் திரட்டுகிற பணியினை மேற்கொண்டு, அதில் வெற்றியும் பெற்றது.

இந்த நிலையில், இம்மானுவேல் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள், அருந்ததியர் விடுதலை முன்னணி இவற்றிற்கிடையிலான ஒற்றுமையும் பலப்பட்டது. சில உடன்பாடுகளோடு தொடர்ந்து இயங்கி காலப்போக்கில்
மேலும் சில அமைப்புகளை உள்வாங்கிக்கொண்டு (அரங்க குணசேகரனின் தமிழக மனித உரிமை கழகம், தலித் பண்பாட்டுப்பேரவை) தமிழக தாழ்த்தப்பட்டோர் விடுதலை முன்னணியாய் பரிணமித்தது.

இதே காலத்தில்தான் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு பெயர்களிலும், அ.மார்க்ஸ் தலைமையிலான நுண் அரசியலாளர்களும் தாழ்த்தப்பட்டோர் சிக்கலில் தலைகொடுக்கத் தொடங்கினர். தமிழகமெங்கும் இரட்டை வாக்குரிமைக்கான நூறு மாநாடுகள் என்று தொடங்கி அதுதான் முதற்பணி என்றும் தங்கள் அரசியலை முன்வைத்தார்கள்.

தொண்டுநிறுவனங்களோ தாழ்த்தப்பட்டோரின் உள்முரண்களை பயன்படுத்தி இயக்கங்களுக்கு இடையே உருவான அந்த ஒற்றுமையை குலைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டன. நுண் அரசிலாளர்களை தங்களின் அரசியல் வடிவங்களாக முன்நிறுத்தினர். ஒற்றுமையை குலைப்பதில் முன்நின்று வெற்றி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாதிரியார் அந்தோணி ராஜ்.(ஐடியாஸ், ஐகப்) இதில் மதுரை இறையியல் கல்லூரியின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

இதுதான் தருணம் என்று காத்திருந்ததுபோல், தாழ்த்தப்பட்டோரின் அரசியல் சக்தியாய் வளர்ந்திருக்கவேண்டிய இயக்கங்களை தேர்தல் பாதையில் சீரழிப்பதற்கான வேலையையும் நுண்அரசியலாளர்கள் தொடங்கி நடத்தி முடித்தனர்.

மேலும், தமிழர் ஒற்றுமை, தமிழ் தேசியம், பாட்டாளி வர்க்க ஒற்றுமை, எல்லாம் ஒருபுறம் கிடக்கட்டும், மேலும் அப்படியொரு தமிழ்தேசிய ஒற்றுமையோ எழுச்சியோ பாட்டாளிவர்க்க புரட்சிக் கனலோ இங்கில்லை, இந்நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கு இடையிலான ஒன்றுபட்ட அரசியல் உருவாக்கமே, பரமக்குடி கொடுமைக்கு எதிராய் உறுதியாய் போராடும் வல்லமை கொண்டது. அதுவே ஆதிக்க சாதிவெறியை எதிர்த்து சமரசமின்றி போராடும் தன்மை கொண்டது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தொண்டு நிறுவன அரசியலால் காவுவாங்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் இயக்கங்களுக்கு இடையிலான தேவை மீண்டும் உருவாகியிருக்கிறது. கடந்த காலத்தில் இதில் முன்னின்ற இம்மானுவேல் பேரவை தேர்தல் பாதையிலும் செல்லாமல், இதை மீண்டும் கட்டியெழுப்பும் முன்முனைப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இப்போதும் களத்தில் நின்று அடக்குமுறைக்கிடையே பணியாற்றுகிறார்கள். இந்தப் பணி வெற்றியடையவும், மீண்டும் தாழ்த்தப்பட்டோர் அந்த மாவட்டங்களில் அரசியல் சக்தியாய் உருவெடுப்பதுமே ஆதிக்கசாதிவெறி வன்முறைகளுக்கு சரியான மாற்றாக இருக்கமுடியும்.

இதை விடுத்து, ஈழத்திற்காக மட்டும்தான் தசை துடிக்குமா என்று நையாண்டி செய்வதோ. தமிழ்தேசியத்தை பழிப்பதற்கான வாய்ப்பாக இதை எடுத்துக்கொள்வதோ எதையும் இங்கே புடுங்கிவிடப்போவதில்லை.

Advertisements
Posted in கட்டுரைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

சி.பி.எம்ல் ஒரு ”மறத்”தமிழன் மிஸ்டர் ச.தமிழ்ச்செல்வன்

இனவாத ஜே.வி.பி யின் அருமையான மார்க்ஸிய கூட்டாளியும் சிங்கள ரதனா ”இந்து” ராமின் பொதுவுடமை கூட்டாளியுமான நம்ம சி.பி.எம் ல இருந்து கூட ஈழத்திற்கு மன்னிக்கவும் இலங்கை தமிழர்களுக்கு ஒருத்தர் கண்ணீர் வடித்து இருக்காருய்யா யாரு? நம்ம தமாசு மன்னிக்கவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க”மறத்” தமிழர் நம்ம ச. டமிழ்செல்வன் தான்

இலங்கையின் இறையானமையின் முன் தமிழன் இரத்தம் எல்லாம் ஒன்னுமே கிடையாது. தனி நாடு கேட்கும் உரிமை கேட்குற அளவுக்கு தமிழனுக்கு அருகதையே கிடையாது சிங்களன் காலை நக்கி பிழைத்து இலங்கையின் இறையாண்மையை காபாற்றுனும் எத்துனை ஆயிரம் தமிழன் செத்தாலும் நாங்க வாயே துறக்க மாட்டோம் என்னா ஜே.வி.பி கோவிச்சுக்கும் இந்து ராம் கோவிச்சிப்பார் அங்க தேயிலை தோட்டத்தை மொத்தமா வச்சு இருக்கும் டாடா கோவிக்கும் யப்பா இவனுக அரசியலை பார்த்தா மார்க்ஸ் இருந்தா தூக்கு போட்டு செத்திருப்பாரு அதை விடுங்க நம்ம இலக்கியவாதி, புனைவுச்செம்மல்,ஈழத்துல தமிழன் சாவும் போது பெண்ணியம் பேசிய பெண்ணியவாதி தமாசு முற்போக்கு எழுத்தாள்ர் சங்க டலைவர் மிஸ்டர் ச.டத்மிழ்ச்செல்வன் என்ன சொல்றாருனா

//புலிகளின் மீதான விமர்சனம் என்பதும் என் மனதை என் மௌனத்தை நான் சமாதானப்படுத்திக்கொள்ளும் திரையாகவும் பயன்பட்டது//

திரையா பயன் பட்டதாம் அடப்பாவிகளா மூளைய என்ன பார்ல அடகு வச்சுட்டீங்களா அவன் அவன் அங்க கொத்து கொத்தா சாவுறான் நம்ம இந்தியாவும் இந்திராவின் மருகள் கலைஞ்ர் கூட்டணி உதவியுடன் சலக ஆயுதமும் கொடுத்து தமிழன சாவடிக்க கொல்லுது தமிழன் சாவை பார்க்காம இருக்க உங்களுக்கு திரை வேற தேவைப்படுது இல்ல.. வெங்கடேசன் கண்ட கண்ட புக்குல திருடி எழுதுன ஆயிரம்பக்க அபத்ததிற்கு ஆயிரம் விழா வைப்போம்னு சவடால் பேசும் நீங்க இலக்கிய கூட்டம்னு சரக்கு பார்ட்டி வைக்கும் உங்க அமைப்பும் உங்க இலக்கிய எழுத்தாள புடிங்கிகள் எல்லாம் அங்க தமிழன சாவடிக்கும் போது போதையில மட்டையாயி இருந்தீங்களா? ஒரு போராட்டம் ஆர்பாட்டம் அதுக்கெல்லாம் நீங்க லாயக்கு இல்லைனா ஒரு கவிதை வாசிப்பாவது வச்சுகளாய்யா.. ஏன் உங்க கட்சி தெலுங்கு தலைமை அதுதாம்பா உங்க கட்சில எப்பய்யா தமிழன் தலைவனா இருந்திருக்கான்? உங்கள தூக்கிட்டி ஒரு கொல்டியை தலைவர போட்டுடும் என்ற பயமா மிஸ்டர் டமிழ் செல்வன். உஙகள் தலைவர் பதவியை காபாற்ற இத்தனை நாள் அமைதியா இருந்த நீங்க தீடிர்னு ஈழம்னு கதைக்க ஆரம்பிச்சிட்டிங்க.

உங்க கட்சியில இதுவரைக்கும் தமிழக தலைமையில தமிழன் இருந்ததே கிடையாது. தேர்தல்களில் பங்கேற்கும் உங்க கட்சியின் வேட்பாளர்கள் கூட பெரும்பாலும் தமிழன இருக்க மாட்டாங்க. முல்லை பெரியாரு பிரச்சனையில் தமிழர்களின் வயிற்றில் கேரளா கம்யுனிஸ்ட்கள் அடிச்சாங்க அப்புறம் அமைதியாய இருந்தீங்க..இனவாத ஜே.வி,பி கூட மேடை பகிர்ந்திட்டீங்க  விளம்பரமும் தேடிக்கொள்ளும் உங்க த.மு.எ.ச புடுங்கிகள் ஈழத்துக்கு ஆதராவா ஒரு துண்டறிக்கையாவது வெளியிட்டு இருக்கீங்களா? தமிழ்செல்வன். உங்கள் தலைவர் பதவியை காபாற்ற தமிழர்களின் உரிமையை காவு கொடுக்கும் உங்கள் விசுவாசம் வாழ்க.

Posted in அரசியல் விமர்சனம், ஈழம் | 4 பின்னூட்டங்கள்

சுகுணா திவாகர்&கோவின் பூச்சாண்டி அரசியலிருந்து விடுதலை அடைவோம்

 ”புலி அரசியலிடமிருந்து விடுதலை அடைவோம்!” இது நம்ம சுகுணா சமிபத்திய உளரல் முதல்ல ஒருபக்க விளம்பர அரசியல் பண்ணும் உங்களைப்போன்ற அதிபுத்திசாலி அரைவேக்காடு கும்பலிடம் இருந்துதான் விடுதலை வேணும்டா சாமி…

//வால்பாறையிலும் மதுரையிலும் என்ன நடந்ததென்று தெரிந்துகொண்டவர்கள், சென்னை தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் நடத்திய ‘பன்முக வாசிப்பில் ஈழக்கவிதைகள்’ அரங்கத்தில் என்ன நடந்ததென்று தெரிந்து கொள்வதிலும் தவறில்லை. பொதுவாக கவிதைத்தொகுப்பு குறித்த விமர்சன அரங்கம் என்பதால் கூட்டத்தின் முற்பகுதி முழுவதும் கவிதைத்தொகுப்பு பற்றியதாகவே இருந்தது. கவிஞர் லதாராமகிருஷ்ணனின் பேச்சுதான் கூட்டத்தின் போக்கை மாற்றிப் போட்டது. லதாராமகிருஷ்ணனின் கோபம் முழுக்க கவிஞர் தாமரை எழுதிய ‘கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்’ என்ற கவிதையைப் பற்றியதாக இருந்தது.///

 வால்பாறையில நம்ம அ.மார்க்ஸு இன்பா அக்காவுடன் ஆடுன குத்து டான்ஸ தவிர வேறேதும் நடந்ததா தெரியல மதுரைல ஈழம்னு தமிழ்நதி பேச ஆரம்பிச்ச உடனே ஆதவன் திட்சண்யாவுக்கு தலித பாசம் வந்து தத்து பித்துனு உளறி இணையத்துலையும் அநியாத்துக்கு உளறுனாரு.. அது என்னனு தெரியல சமிப காலமா உங்க கும்பலுக்கு ஈழம் தமிழ் தேசியம்னு பேசுனாலே தலித் பாசம் பொங்கி வழியுது ஈழம்னா கூடவே இசுலாமிய பாசமும்… ஆனா உனா உத்தமபுரம் கண்டதேவி இரட்டைக்குவளைனு கூவுறீங்க அதுல ஒருத்தரு புலிகள் ஏன் கொரல் கொடுக்கலைனு வேகமா கூவுறாரு.. சரி அந்த பிரச்சனை நடக்கும் போது உங்கள் கும்பல என்ன நாடா கடத்துனாங்க.. உள்ளுர்ல தானப்பா இருந்திங்க எதையுமே புடுங்க காணாம் அவன் புடுங்கல இவன் புடுங்களைனு பேச மட்டும் தெரியுது.. தாமரை கவிதை எழுதுதனதுனாலத்தான் சிங்களன் வதை முகாம்ல தமிழன கொடுமைப்படுத்துன மாதிரி வேற எழுத்தித் தொலைச்சுருக்கீங்க.. வேணா உங்க கும்பல மக்கா எல்லாம் சிங்களனுக்கும் மனிதாபிமானி ராஜபக்சேவுக்கும் அவர்களுக்கு ஆயுதமும் ஆதரவும் வழங்கிய சோனியா கருனாநிதி கும்பலுக்கு ஒரு வாழ்த்துப்பாவும் பரணியும் பாடுனீங்கன்னா முகாம்ல இருக்கும் தமிழன விடுதலை பண்ணிடுவாங்க அப்பால யாரும் காணப்போகமாட்டங்க எந்த தமிழச்சியும் கற்பழிக்கபடமாட்டா முதல்ல அந்த வேலையைப்பண்ணுங்க சுகுணா.. உங்களுக்கு தமிழினத்தலைவர் பட்டம் கொடுத்துடலாம்.

முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றுனதைப்பற்றி எத்துன வாட்டி பேசுவீங்க ஒரு போராளி அமைப்பு ஆரம்பல கால பதட்டத்தில் செய்யும் சில தவறுகள்( தவறுகள் காலத்தைப்பொருத்தவை) வைத்து ஒட்டு மொத்த போராட்டத்தையும் கொச்சைபடுத்தி அது மட்டும்தான் பிரச்சனை என பிரச்சனையை மடை மாற்றம் செய்து நானும் அறிவுஜிவி அறிவுஜிவினு வடிவேலு பாணிலு கூவும் உங்களப்பார்த்த பாவமா இருக்கு சுகுணா. இருக்குறவனை எல்லாம் சவடிச்சு கோவணத்தையும் உருவுனப்பிறகு தமிழ்ல தேசிய கீதம் இருக்குற பெருமைய சொன்னாராம் சுகன்.. யோவ் உங்களுக்கு மானம் வெட்கமே கிடையாதய்யா..

சுகுணா திவாகரின் கட்டுரையின் மொத்த சாரம்சம் என்னனா இப்போ யாரும் சிங்களனையோ இந்தியாவையோ கலைஞரையோ சோனியா அம்மையாரையோ எதிர்த்து பேசமா வாழ்த்துப்பா மட்டும்தான் பாடனும் .. இவுக 15 ஆண்டுகளாக( எண்ணிக்கை விளையாட்டுக்கெல்லாம் சுகுணா வரமாட்டாரு) சொன்ன மாற்றுக்கருத்துக்களை பிரபாகரன் எத்துகிட்டாருன்னா தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும், பிரபாகரனுக்கு அரசியல் தெரியாது,புலிகள் போரட்டம் வெறும் ஆயுதப்போராட்டம் அது புரட்சியில்லை. சோபாவும் அ.மார்க்ஸும் தான் உண்மையான புரட்சிவாதிகள் அவர்கள் பண்ணுவதுதான் புரட்சி.. ஈழத்துல உண்மையான பிரச்சனை தேசியத்திற்கான பிரச்சனையில்லை தலித் இஸ்லாமிய பிரச்சனை மட்டும்தான் இருக்கு மத்ததெல்லாம் கிடையவே கிடையாது இல்லையா? அடிங் கொய்யால…எப்படிய்யா உங்களால மட்டும்  இப்படியேல்லாம் யோசிக்க முடியுது

தமிழர்களிடம் இருந்து இசுலாமியர்களை அவர்களுக்கு தெரியாமலே பிரித்த இஸ்ரேலின் மொசார்ட் உளவு அமைப்பின் சதி பற்றியும் அதற்கு உடன் போன முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லலித் முத்தலிப்பைப் பற்றியும் சுகுணாவுக்கு தெரியாதா? இல்லை தான் கட்டமைக்கும் முற்போக்கு மார்க்ஸிய பிம்பத்திற்கு இதெல்லாம் இடைஞ்சல் என தவிர்கிறாரா? இவ்வளவு கேள்வி கேட்கும் சுகுணா & கோ புலிகளில் வசம் இருந்து பறிக்கப்பட்ட யாழ்பாணத்தில் முசுலிம்களை மீள் குடியேற்ற எந்த நடவடிக்கையையும் மேற் கொள்ளாமல் (முசுலிம்களீடம் புலிகள் மீதான வெறுப்பை தக்க வைக்க) சிங்கள அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது பற்றியும் அதைப்பற்றி வாயே துறக்காமல் இருக்கும் முசுலிம் அமைப்புகளையும் ஏன் விம்ர்சிப்பதில்லை அப்படி விமர்சிச்சா உங்கள் சிறுபான்மை ஆதரவு முற்போக்கு பிம்பம் சிதைந்திடும் என்ற பயமா?

புலிகள் தமிழர்களை மிரட்டி தங்களுடன் அழைத்துச்சென்றார்களாம் யோவ் அங்க அங்க குண்டு மழை பொழிஞ்சுகிட்டு இருக்கு புலிகளோ சில ஆயிரம் பேர் அவுக எப்படிய்யா லட்சக்கணக்கான தமிழர்களை துப்பாக்கி முனைல கூட்டிட்டு போக முடியும் மூளைய சோ.பா. அ.மாவுடன் சேர்ந்து பார்ல அடகு வச்சிட்டீங்களா? அதுவும் தமிழ்ர்களை துணை பிணமாக்குனாங்க பிரபாகரனுக்கு அரசியல் தெரியாது அப்படி இப்படினு செம்ம பேத்தல் வேற.. அரசியல் தெரியாமல 10 ஆண்டுகளுக்கு மேல் தனி அரசாங்கமே நடத்துனாங்க.. புலிகள சரியான அரசியல் பார்வையாலும் அதன்சார் ராணுவ வெற்றியாலும் தான் டட்லி சேனநாயக தொடங்கிய தமிழ் நில ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது இல்லைனா இலங்கைல தமிழன் எல்லா இடங்களிலும் சிறுபான்மையினராய் மாறி ஈழமே இருந்திருக்காது.. பிரபாகரனுக்கு அரசியல் தெரிந்ததால்தான் அது இந்தியா உட்பட எந்த நாட்டையும் விமர்சிக்கவில்லை உலக அரசியல் ஒரு வட்டத்தைப்போன்றது காலம் எல்லா முடிவுகளை மாற்றிக்கொண்டே செல்லும் அந்த அரசியல் அறிவு இருந்தனால்தான் இத்தனை ஆண்டுகளாய் புலிகளின் போராட்டம் வலிமையுடன் இருந்த்து. இப்போது வீழ்ச்சிதான் ஆனால் மறுபடியும் எழுவோம்…

மத்தபடி நெடுமாறன் மணியரசன் போன்ற காமெடி பிஸுங்களுகும் அவர்களின் மொன்னையான சாதிய திமிருடன் கூடிய அரசியலுக்கும் இன அழிப்பில் எந்த அளவு பங்குண்டோ அந்த அளவு விமர்சனம் என்ற பெயரில் போராளிகளையும் போராட்டத்தையும்  கொச்சைபடுத்தும் உங்கள் குமபலுக்கும் உண்டு ”

” தோழர்களே! இறுதிநாட்களில் கொல்லப்பட்ட வன்னி மக்களின் பிணங்களின் மீது சிந்தியுங்கள்! நண்பர்களே, நீதியின் பேராலும் அன்பின் பேராலும் ஜனநாயகத்தின் பேராலும் யோசியுங்கள்! “” இந்த மாதிரி அரைவேக்காட்டு அறிவுஜிவி வேசம் போடும் சுகுனா சுகன் அ.மார்க்ஸ் சோ.பா கூட்டணியின் மடைமாற்றும் அரசியலில் விழிப்புடன் செயல்படுங்கள்

தமிழீழம் மலரும் தருதலைகள் வீழும் அதைக்காலம்சொல்லும்

Posted in அரசியல் விமர்சனம், ஈழம் | 10 பின்னூட்டங்கள்

தமிழ் தேசம் ஒழியட்டும் பார்பனியம் வெல்லட்டும்

தமிழ் தேசம் ஒழியட்டும் பார்பனியம் வெல்லட்டும்

 

தமிழ் தேசியவாதிகள் சாதியவாதிகளாக இருப்பதாகவும் தமிழ் தேசியம் பேசுபவர்கள் பெரு முதலாளிகளாக இருப்பதாகவும் ஈழத்தில் சண்டை போடத்தெரியாமல் சண்டை போட்டதாகவும் கண நேரமும் துப்பாக்கியும் கையுமாய் இந்திய ஏகாதிபத்திய அரசை எதிர்த்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும் மரியாதைக்குறிய ம.க.இ.க( மருதையன் கலை இலக்கிய கழகம்) காரர்கள் சமிபகாலமாக பேசத்தொடங்கி உள்ளார்கள்

image-4-220196

”எவன் பொண்ட்டாட்டி எவனோடு போனாலும் பூசாரிக்கு தேவை தட்சணை” அப்படி எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும் அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ மருதையன் கலை இலக்கிய கழத்துக்கும் அதை வால் பிடித்து அடையாளம் தேடும் சில ’புரட்சிகர’ எழுத்தாளர்களுக்கும் சரியாப்பொருந்தும். ஈழத்தமிழர்களுக்கு( எங்கள் தொப்புள் கொடி உறவு) ஆதரவாய் தமிழ் நாடு முழுக்க போராட்டம் நடந்த போது ’எங்க அடிக்கிற’ அலையில காணம போய்டுவோம்ணு தங்கள் புள்ள புடிக்கிற வேலைய அங்கிருந்து ஆரம்பிச்சாங்க ( முத்துக்குமாரின் சாவு வீட்டுலை கூடுன இளைஞர்களை கவர அங்க நடத்துன கூத்து சரியான காமெடி பீஸூங்கோ) வந்த புள்ளைகள் எல்லாம் விவரமா இருந்ததுனால அவங்க பருப்பு எங்கையும் வேகல..

தங்கள் அரசியல் ஞான புளுகு மன்னிக்கவும் புரட்சி ஏட்டில் ஈழத்தமிழர்கள் வேறு இனம் தமிழகத்தமிழர்கள் வேறு இனம் என்ற புதிய கண்டு பிடிப்பை இந்த கும்பல் கண்டு பிடிச்சிருக்கு. ஒரு வேலை நோபல் பரிசு கொடுப்பவனுக்கு தெரிஞ்சுட்டா இந்த ஆண்டுக்கான சமுகவியலுக்கான நோபல் பரிசு நம்ம கும்பலுக்குத்தான்( நோபல் பரிசு பன்னாட்டு பரிசு ஆச்சேனு அதையும் ஏத்துக்க மாட்டாங்க ஆனா எங்கையோ இடிக்குது என்னடானு கேட்டா நம்ம உளவுத்துறை அதை வாங்கி கொடுக்கிறது நம்ம பொறுப்புங்குறான் எப்பவும் கட்டுன பொண்ட்டாடியை விட கள்ள பொண்ட்டாட்டி உறவு தானே பெரிசு அது தான் உளவுத்துறை உறவு மட்டும் எப்பவுமே தொடருது) சரி விஷயத்துக்கு வருவோம். உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடச் சொல்லுற இவுங்கா உள்ளுர்த் தமிழன் ஒன்றுபட்ட மட்டும் சிக்கல் போல

தமிழ் தேசியம் பேசுறவுங்கள்ள சில பயபுள்ளைக சாதித்திமிறோட இருக்காங்கிறது உண்மைதான்.. அதுக்காக தமிழ்தேசியமே தப்புங்கிறது மார்க்ஸியம் பேசுற ம.க.இ.க தப்புங்கிறதானல மார்க்ஸியமே தப்புங்கற மாதிரில்ல ஆயிடும். சாதியத்த இப்படி பெடல் எடுக்கிற நம்ம ம.க.இ.காவிக்கு நம்ம வாழ்த்துக்கள். ஆனால் வாழ் நாள் முழுவதும் சாதி இழிவுக்காக போராடுன அம்பேத்காரையும் பெரியாரையும் இரட்டை மலை சினிவாசனையும் மருதையன் கலை இலக்கிய கழகத்துக்கு ஏன் பிடிக்காம போச்சுனு தெரியல ஏன்னா அம்பேத்காரு தொழிலாளர்களை சொரண்டுறது இந்த கம்யுனிஸ்ட்கள் தான்னு போட்டு ஒடச்சதுன்னாலையோ என்னமோ பெரியாருட்டையும் இவங்களுக்கு சிக்கலு ஏன்னா பெரியாரு பெரு முதலாளி ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் புரியல தமிழ் தேசியவாதிகளை திட்டும் போது மட்டும் ம.க.இ.காவின் அடிவருடி எழுத்தாளர்கள் ஏன் பெரியாருக்கு கிட்ட மட்டும் ”மதி” மயங்கி கிடக்குறாங்கனு தெரியல ஒரு வேலை இது தான் ராஜ தந்திரமோ?

ராணுவச்சண்டை பத்தி வாயும் ……………ம் கிழிய அளவு நியாயமான விமர்சனம்கிற பேருல இவனுக பண்ணுற அலப்பற தாங்க முடியல. முதல்ல எல்லாம் கிழிய இந்திய தேசியம் பேசுற இவனுக நொடிப்பொழுதும் இமையாம துப்பாக்கியும் கையுமா இந்திய மொதலாளிகளுக்கு எதிரா துப்பாக்கி சண்டை போடுற இவனுக புலிகள் போடுற ராணுவச்சண்டைபத்தி பேச எந்த அருகதையும் இல்ல எழுதுற எழுத்தாளனுக்கு பேனா கிடச்ச எதையும் எழுதலாம்கிற கொஞ்சம் மாத்திக்கட்டும்..ஆனா ஒன்னே ஒன்னுங்க எந்த பெரியாரை வச்சு தமிழ் தேசிய வாதிகளை கொறை சொல்லுறாங்களோ அவர் வார்த்தையில சொல்லுறதுன்னா பாம்ப கண்டாலும் விட்டுடு பார்ப்பான கண்ட அடிங்கிற வார்த்தை இன்னும் சரியாப் பொருந்துது இந்த மருதையன் கலை இலக்கிய கழத்துக்கு. தன்னுடைய இனத்தின் ஆதிக்கம் எங்க ஒழிஞ்சு போயிடும்னு கெட்டிய புடிச்சுக்கிட்டு தான் ஆரியன்னு கூவுற சாதித் திமிரு சூப்பரோ சூப்பரு…

 தமிழ் தேசியம் ஒழியட்டும், பார்பனியம் வெல்லட்டும்

ஜார்ரே ஜகாங்கே அச்சா ம.க.இ.காவா இல்ல கொக்கா

Posted in அரசியல் விமர்சனம், ஈழம், ம.க.இ.க | Tagged | 18 பின்னூட்டங்கள்

அம்மணக்காந்தியை ஆயிரம் கோடிக்கு

அம்மணக்காந்தியை ஆயிரம் கோடிக்கு

எனது தடத்தில் படிந்த
குருதிக்கறையை கழுவ
நீண்ட வரிசையில் நான்

பற்களில் படிந்த இரத்தக்கறையை
கழுவ என் முன்னால் நின்ற காந்தி
தன் கோவணத்தை தேடியபடியே
தன் தடியை தவறவிட்டார்

கந்தக நெடி பரவிய விழிகளுடன்
பிணவாடை சுமந்த புத்தனோ
தன் சாம்பல் குவியலை காந்தியின்
கோவணத்தில் கவனமாய் மறைத்தார்

காந்தியின் தடியை களவாடிய
ஊடகங்களோ ஒளிபரப்பின
அம்மணக்காந்தியை ஆயிரம் கோடிக்கு…

Posted in ஈழம், கவிதை | 1 பின்னூட்டம்

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

அண்ணா அறிவாலயத்தை கடந்த போது

New Image

இன்றைய வெக்கை மிகுந்த பின் காலைப்பொழுதில் அண்ணா அறிவாலயத்தை கடந்த போது வாகன நிரிசலில் சிக்கி வெயிலில் வறுபட்ட கொடுமையைவிட தள்ளாத வயதில் பிறந்த நாள் கொண்டாடும் கருணா & கோ வின் கொண்டாட்ட உண்ர்வுதான் மனதை பிழிவதாய் இருந்த்து. 20,000 தமிழர்கள் இறந்ததாய் ஐ.நா பொதுச்செயலாளரே ஒத்துக்கொண்ட வேளையில் இவர்களின் தொடர் கோலாகலம் சகிக்க முடியவில்லை..

 karunanidhi-23109313

ஈழத்தின் கருகி தமிழர்கள் செத்து அவர்களது பிணம் கூட முழுமையாய் அழுகி இருக்காது.. கொத்துக்கொத்தாய் சிறுவர்களும் தாய்மார்களும் இளைஞர்களுமாய் செத்து பிணமாய் நம்மை உறுத்திக்கொண்டு இருக்கும் வேளையில்.. அகதி முகம்கள் என்ற திறந்த வெளிச்சிறையில் நம் சொந்தங்கள் சாப்பாட்டிற்கு கையேந்தி பட்டினியால் வாடும் அவல நிலைக்கு நடுவில், 6 கோடித்தமிழ்ர்களின் முதல்வர் இங்கே தம் பையனுக்கு முடி சூட்டியும் தள்ளாத வயதிலும் வீல் சேரில் பிறந்தநாள் கொண்டாடுவதும் சகிக்க முடியவில்லை.. ஈன இனத்தில் பிறந்து விட்டோமோ என்று குத்திக் காண்பிக்கிறாரா கலைஞர்?

 கைக்கெட்டும் தூரம் எம் தமிழன் கொத்துக்கொத்தாய் கருகிக்செத்த பிணவாசனை சுமந்து நீங்க பெற்ற வெற்றியின் பூரிப்பா கலைஞ்ர் அவ்ர்களே…. பணமும் வெற்றியும் குடும்பமுமாய் அண்ணாவையும் பெரியாரையும்  போஸ்டரில் ஒரு முலையில் போட்டு கிருஷ்னண் வேசம் தரிப்பவர் தானே நீங்கள்

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்