தமிழ் தேசம் ஒழியட்டும் பார்பனியம் வெல்லட்டும்
தமிழ் தேசியவாதிகள் சாதியவாதிகளாக இருப்பதாகவும் தமிழ் தேசியம் பேசுபவர்கள் பெரு முதலாளிகளாக இருப்பதாகவும் ஈழத்தில் சண்டை போடத்தெரியாமல் சண்டை போட்டதாகவும் கண நேரமும் துப்பாக்கியும் கையுமாய் இந்திய ஏகாதிபத்திய அரசை எதிர்த்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும் மரியாதைக்குறிய ம.க.இ.க( மருதையன் கலை இலக்கிய கழகம்) காரர்கள் சமிபகாலமாக பேசத்தொடங்கி உள்ளார்கள்

”எவன் பொண்ட்டாட்டி எவனோடு போனாலும் பூசாரிக்கு தேவை தட்சணை” அப்படி எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும் அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ மருதையன் கலை இலக்கிய கழத்துக்கும் அதை வால் பிடித்து அடையாளம் தேடும் சில ’புரட்சிகர’ எழுத்தாளர்களுக்கும் சரியாப்பொருந்தும். ஈழத்தமிழர்களுக்கு( எங்கள் தொப்புள் கொடி உறவு) ஆதரவாய் தமிழ் நாடு முழுக்க போராட்டம் நடந்த போது ’எங்க அடிக்கிற’ அலையில காணம போய்டுவோம்ணு தங்கள் புள்ள புடிக்கிற வேலைய அங்கிருந்து ஆரம்பிச்சாங்க ( முத்துக்குமாரின் சாவு வீட்டுலை கூடுன இளைஞர்களை கவர அங்க நடத்துன கூத்து சரியான காமெடி பீஸூங்கோ) வந்த புள்ளைகள் எல்லாம் விவரமா இருந்ததுனால அவங்க பருப்பு எங்கையும் வேகல..
தங்கள் அரசியல் ஞான புளுகு மன்னிக்கவும் புரட்சி ஏட்டில் ஈழத்தமிழர்கள் வேறு இனம் தமிழகத்தமிழர்கள் வேறு இனம் என்ற புதிய கண்டு பிடிப்பை இந்த கும்பல் கண்டு பிடிச்சிருக்கு. ஒரு வேலை நோபல் பரிசு கொடுப்பவனுக்கு தெரிஞ்சுட்டா இந்த ஆண்டுக்கான சமுகவியலுக்கான நோபல் பரிசு நம்ம கும்பலுக்குத்தான்( நோபல் பரிசு பன்னாட்டு பரிசு ஆச்சேனு அதையும் ஏத்துக்க மாட்டாங்க ஆனா எங்கையோ இடிக்குது என்னடானு கேட்டா நம்ம உளவுத்துறை அதை வாங்கி கொடுக்கிறது நம்ம பொறுப்புங்குறான் எப்பவும் கட்டுன பொண்ட்டாடியை விட கள்ள பொண்ட்டாட்டி உறவு தானே பெரிசு அது தான் உளவுத்துறை உறவு மட்டும் எப்பவுமே தொடருது) சரி விஷயத்துக்கு வருவோம். உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடச் சொல்லுற இவுங்கா உள்ளுர்த் தமிழன் ஒன்றுபட்ட மட்டும் சிக்கல் போல
தமிழ் தேசியம் பேசுறவுங்கள்ள சில பயபுள்ளைக சாதித்திமிறோட இருக்காங்கிறது உண்மைதான்.. அதுக்காக தமிழ்தேசியமே தப்புங்கிறது மார்க்ஸியம் பேசுற ம.க.இ.க தப்புங்கிறதானல மார்க்ஸியமே தப்புங்கற மாதிரில்ல ஆயிடும். சாதியத்த இப்படி பெடல் எடுக்கிற நம்ம ம.க.இ.காவிக்கு நம்ம வாழ்த்துக்கள். ஆனால் வாழ் நாள் முழுவதும் சாதி இழிவுக்காக போராடுன அம்பேத்காரையும் பெரியாரையும் இரட்டை மலை சினிவாசனையும் மருதையன் கலை இலக்கிய கழகத்துக்கு ஏன் பிடிக்காம போச்சுனு தெரியல ஏன்னா அம்பேத்காரு தொழிலாளர்களை சொரண்டுறது இந்த கம்யுனிஸ்ட்கள் தான்னு போட்டு ஒடச்சதுன்னாலையோ என்னமோ பெரியாருட்டையும் இவங்களுக்கு சிக்கலு ஏன்னா பெரியாரு பெரு முதலாளி ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் புரியல தமிழ் தேசியவாதிகளை திட்டும் போது மட்டும் ம.க.இ.காவின் அடிவருடி எழுத்தாளர்கள் ஏன் பெரியாருக்கு கிட்ட மட்டும் ”மதி” மயங்கி கிடக்குறாங்கனு தெரியல ஒரு வேலை இது தான் ராஜ தந்திரமோ?
ராணுவச்சண்டை பத்தி வாயும் ……………ம் கிழிய அளவு நியாயமான விமர்சனம்கிற பேருல இவனுக பண்ணுற அலப்பற தாங்க முடியல. முதல்ல எல்லாம் கிழிய இந்திய தேசியம் பேசுற இவனுக நொடிப்பொழுதும் இமையாம துப்பாக்கியும் கையுமா இந்திய மொதலாளிகளுக்கு எதிரா துப்பாக்கி சண்டை போடுற இவனுக புலிகள் போடுற ராணுவச்சண்டைபத்தி பேச எந்த அருகதையும் இல்ல எழுதுற எழுத்தாளனுக்கு பேனா கிடச்ச எதையும் எழுதலாம்கிற கொஞ்சம் மாத்திக்கட்டும்..ஆனா ஒன்னே ஒன்னுங்க எந்த பெரியாரை வச்சு தமிழ் தேசிய வாதிகளை கொறை சொல்லுறாங்களோ அவர் வார்த்தையில சொல்லுறதுன்னா பாம்ப கண்டாலும் விட்டுடு பார்ப்பான கண்ட அடிங்கிற வார்த்தை இன்னும் சரியாப் பொருந்துது இந்த மருதையன் கலை இலக்கிய கழத்துக்கு. தன்னுடைய இனத்தின் ஆதிக்கம் எங்க ஒழிஞ்சு போயிடும்னு கெட்டிய புடிச்சுக்கிட்டு தான் ஆரியன்னு கூவுற சாதித் திமிரு சூப்பரோ சூப்பரு…
தமிழ் தேசியம் ஒழியட்டும், பார்பனியம் வெல்லட்டும்
ஜார்ரே ஜகாங்கே அச்சா ம.க.இ.காவா இல்ல கொக்கா
இங்கு தமிழ் தேசியம் பேசுபவர்கள் வெள்ளாள தேசியம் பேசுவவர்களாக உள்ளனர்.. மற்றபடி ம.க.இ.காவின் அருவெருப்பான அரசியலை தோலிரித்துக்காட்டிய உள்ளது இந்த பதிவு
தமிழ் தேசியவாதிகளை திட்டும் போது மட்டும் ம.க.இ.காவின் அடிவருடி எழுத்தாளர்கள் ஏன் பெரியாருக்கு கிட்ட மட்டும் ”மதி” மயங்கி கிடக்குறாங்கனு தெரியல ஒரு வேலை இது தான் ராஜ தந்திரமோ?//
எங்கையோ இடிக்குதே அந்த எழுத்தாளும் பதிவர் தானே
நீங்கள் ஒரு ஓடுகாலி, லும்பன், முதலாளித்துவ அடிவருடி
நீங்கள் ஒரு ஓடுகாலி, லும்பன், முதலாளித்துவ அடிவருடி////
ஆரம்பிச்சிட்டாங்கையா இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறேன்..
சர்வதேச இந்திய மற்றும் இலங்கை முதலாளித்துவ ஊடகங்கள் புலிகள் மககளை மனித கேடயமாகப் பயன்படுத்துவதாக எழுதிக்கொண்டிருந்ததை தனது புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரட்சிகர இதழான புதிய ஜனநாயகத்தில் வாந்தி எடுத்துக்கொண்டிருந்த இவர்கள் அதே குற்றச்சாட்டை மேற்குவங்கத்தின் லால்காரில் மாவோயிஸ்ட்டுகள் மீது இந்திய ஆளும்வர்க்க ஊடகங்கள் சுமத்தியபோது எங்கே இரை எடுக்க போனார்கள் என்று தெரியவில்லை.
ம.க.இ.க பற்றி உனக்கு என்ன தெரியும். எதோ பெரிய கண்டுபிடிப்பு போல் ஒரு சொத்தை வாதத்தை வைக்கிறாய்
கம்யூனிஸ்ட்டுகள் என்று அறிவித்துக்கொண்டு போராடுபவர்கள் மீது இந்த கும்பலுக்கு பாசம் என்றும் அப்படி அறிவிக்காமல் போராடியதால்தான் புலிகளை இவர்கள் ஆதரிக்கவில்லை எனறு எல்லாம் யாரும் தவறாக நினைத்துவிடக்கூடாது.
இப்படி எல்லாம் காட்டிக்கொண்டால்தான் மாவோயிஸ்ட்டுகள் இவர்களிடம் தொடர்புகளை வளர்த்துக்கொள்வார்கள் அதனை பயன்படுத்தி அவர்களை ஆளும்வர்க்கத்துக்கு அடையாளம் காட்டலாம் என்கிற நப்பாசைதான் நம் குழுககொழுந்துகளுக்கு
அரசியல் நிகழ்வுகளுக்கு வெளியில் நின்று உளவு பார்க்கும் காவல்துறை மட்டுமே எப்போதும் ஆளும் வர்க்கத்துக்கு போதாது என்பதையும்
அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலமாக உண்மையான புரட்சிகர சக்திகளை அடையாளம் காண்பது அணிதிரட்டுவது திசைதிருப்புவது நீர்த்துபோக செய்வது அல்லது காட்டிகொடுப்பது என்கிற செயல்பாடுகளுக்கு ஆளும்வர்க்கத்துக்கு சில அமைப்புகள் தேவை என்பதை தமிழகத்தின் இளைய தலைமுறை உணர்ந்துகொண்டு செயல்பட வேண்டும்.
//
நீங்கள் ஒரு ஓடுகாலி, லும்பன், முதலாளித்துவ அடிவருடி////
ஆரம்பிச்சிட்டாங்கையா இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறேன்..
//
ஹி ஹி ஹி……
ஈழப்போராட்டத்தையும் புலிகளின் தியாகத்தையும் தொடர்ந்து விமர்சனம் என்ற போர்வையில் கொச்சைபடுத்தி வரும் போலி புரட்சி கும்பலை அம்பலப்படுத்திய அருமையான பதிவு தொடருங்கள் அழகுராஜா
ம.க.இ.க வை குறை சொல்வதற்கு முன்னால்…டுமீல் குப்பம் நரியே….. வேறு எந்த அரசியல் கட்சிதான் தமிழகத்தில் சரியான நிலைபாடு எடுத்தது கொஞ்சம் சொல்லேன் கேட்போம்..
ம.க.இ.கா அரசியல் கட்சிய நல்லா காமெடி பண்ணுறீங்க புஸ்வானம்.
ஹி ஹி
லும்பனுக்கும் கும்பலுக்கும் சண்ட….
சபாசு….சரியான போட்டி..
லும்பனுக்கும் கும்பலுக்கும் சண்ட….///
லும்பன்னா யாருங்க
kalathil sandai pota thaan vimarchanam pannanumkirathu pasisim
DEAR SIR,
THIS IS FIST TIME I AM READING YOUR WEBSITE.PLS INFORM YOUR ORINIAL NAME AND YOUR BACKGROUND.
TRULY
P.SELVARAJ
NEELANGARAI,CHENNAI