சி.பி.எம்ல் ஒரு ”மறத்”தமிழன் மிஸ்டர் ச.தமிழ்ச்செல்வன்
இனவாத ஜே.வி.பி யின் அருமையான மார்க்ஸிய கூட்டாளியும் சிங்கள ரதனா ”இந்து” ராமின் பொதுவுடமை கூட்டாளியுமான நம்ம சி.பி.எம் ல இருந்து கூட ஈழத்திற்கு மன்னிக்கவும் இலங்கை தமிழர்களுக்கு ஒருத்தர் கண்ணீர் வடித்து இருக்காருய்யா யாரு? நம்ம தமாசு மன்னிக்கவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க”மறத்” தமிழர் நம்ம ச. டமிழ்செல்வன் தான்
இலங்கையின் இறையானமையின் முன் தமிழன் இரத்தம் எல்லாம் ஒன்னுமே கிடையாது. தனி நாடு கேட்கும் உரிமை கேட்குற அளவுக்கு தமிழனுக்கு அருகதையே கிடையாது சிங்களன் காலை நக்கி பிழைத்து இலங்கையின் இறையாண்மையை காபாற்றுனும் எத்துனை ஆயிரம் தமிழன் செத்தாலும் நாங்க வாயே துறக்க மாட்டோம் என்னா ஜே.வி.பி கோவிச்சுக்கும் இந்து ராம் கோவிச்சிப்பார் அங்க தேயிலை தோட்டத்தை மொத்தமா வச்சு இருக்கும் டாடா கோவிக்கும் யப்பா இவனுக அரசியலை பார்த்தா மார்க்ஸ் இருந்தா தூக்கு போட்டு செத்திருப்பாரு அதை விடுங்க நம்ம இலக்கியவாதி, புனைவுச்செம்மல்,ஈழத்துல தமிழன் சாவும் போது பெண்ணியம் பேசிய பெண்ணியவாதி தமாசு முற்போக்கு எழுத்தாள்ர் சங்க டலைவர் மிஸ்டர் ச.டத்மிழ்ச்செல்வன் என்ன சொல்றாருனா
//புலிகளின் மீதான விமர்சனம் என்பதும் என் மனதை என் மௌனத்தை நான் சமாதானப்படுத்திக்கொள்ளும் திரையாகவும் பயன்பட்டது//
திரையா பயன் பட்டதாம் அடப்பாவிகளா மூளைய என்ன பார்ல அடகு வச்சுட்டீங்களா அவன் அவன் அங்க கொத்து கொத்தா சாவுறான் நம்ம இந்தியாவும் இந்திராவின் மருகள் கலைஞ்ர் கூட்டணி உதவியுடன் சலக ஆயுதமும் கொடுத்து தமிழன சாவடிக்க கொல்லுது தமிழன் சாவை பார்க்காம இருக்க உங்களுக்கு திரை வேற தேவைப்படுது இல்ல.. வெங்கடேசன் கண்ட கண்ட புக்குல திருடி எழுதுன ஆயிரம்பக்க அபத்ததிற்கு ஆயிரம் விழா வைப்போம்னு சவடால் பேசும் நீங்க இலக்கிய கூட்டம்னு சரக்கு பார்ட்டி வைக்கும் உங்க அமைப்பும் உங்க இலக்கிய எழுத்தாள புடிங்கிகள் எல்லாம் அங்க தமிழன சாவடிக்கும் போது போதையில மட்டையாயி இருந்தீங்களா? ஒரு போராட்டம் ஆர்பாட்டம் அதுக்கெல்லாம் நீங்க லாயக்கு இல்லைனா ஒரு கவிதை வாசிப்பாவது வச்சுகளாய்யா.. ஏன் உங்க கட்சி தெலுங்கு தலைமை அதுதாம்பா உங்க கட்சில எப்பய்யா தமிழன் தலைவனா இருந்திருக்கான்? உங்கள தூக்கிட்டி ஒரு கொல்டியை தலைவர போட்டுடும் என்ற பயமா மிஸ்டர் டமிழ் செல்வன். உஙகள் தலைவர் பதவியை காபாற்ற இத்தனை நாள் அமைதியா இருந்த நீங்க தீடிர்னு ஈழம்னு கதைக்க ஆரம்பிச்சிட்டிங்க.
உங்க கட்சியில இதுவரைக்கும் தமிழக தலைமையில தமிழன் இருந்ததே கிடையாது. தேர்தல்களில் பங்கேற்கும் உங்க கட்சியின் வேட்பாளர்கள் கூட பெரும்பாலும் தமிழன இருக்க மாட்டாங்க. முல்லை பெரியாரு பிரச்சனையில் தமிழர்களின் வயிற்றில் கேரளா கம்யுனிஸ்ட்கள் அடிச்சாங்க அப்புறம் அமைதியாய இருந்தீங்க..இனவாத ஜே.வி,பி கூட மேடை பகிர்ந்திட்டீங்க விளம்பரமும் தேடிக்கொள்ளும் உங்க த.மு.எ.ச புடுங்கிகள் ஈழத்துக்கு ஆதராவா ஒரு துண்டறிக்கையாவது வெளியிட்டு இருக்கீங்களா? தமிழ்செல்வன். உங்கள் தலைவர் பதவியை காபாற்ற தமிழர்களின் உரிமையை காவு கொடுக்கும் உங்கள் விசுவாசம் வாழ்க.
சுகுணா திவாகர்&கோவின் பூச்சாண்டி அரசியலிருந்து விடுதலை அடைவோம்
”புலி அரசியலிடமிருந்து விடுதலை அடைவோம்!” இது நம்ம சுகுணா சமிபத்திய உளரல் முதல்ல ஒருபக்க விளம்பர அரசியல் பண்ணும் உங்களைப்போன்ற அதிபுத்திசாலி அரைவேக்காடு கும்பலிடம் இருந்துதான் விடுதலை வேணும்டா சாமி…
//வால்பாறையிலும் மதுரையிலும் என்ன நடந்ததென்று தெரிந்துகொண்டவர்கள், சென்னை தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் நடத்திய ‘பன்முக வாசிப்பில் ஈழக்கவிதைகள்’ அரங்கத்தில் என்ன நடந்ததென்று தெரிந்து கொள்வதிலும் தவறில்லை. பொதுவாக கவிதைத்தொகுப்பு குறித்த விமர்சன அரங்கம் என்பதால் கூட்டத்தின் முற்பகுதி முழுவதும் கவிதைத்தொகுப்பு பற்றியதாகவே இருந்தது. கவிஞர் லதாராமகிருஷ்ணனின் பேச்சுதான் கூட்டத்தின் போக்கை மாற்றிப் போட்டது. லதாராமகிருஷ்ணனின் கோபம் முழுக்க கவிஞர் தாமரை எழுதிய ‘கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்’ என்ற கவிதையைப் பற்றியதாக இருந்தது.///
வால்பாறையில நம்ம அ.மார்க்ஸு இன்பா அக்காவுடன் ஆடுன குத்து டான்ஸ தவிர வேறேதும் நடந்ததா தெரியல மதுரைல ஈழம்னு தமிழ்நதி பேச ஆரம்பிச்ச உடனே ஆதவன் திட்சண்யாவுக்கு தலித பாசம் வந்து தத்து பித்துனு உளறி இணையத்துலையும் அநியாத்துக்கு உளறுனாரு.. அது என்னனு தெரியல சமிப காலமா உங்க கும்பலுக்கு ஈழம் தமிழ் தேசியம்னு பேசுனாலே தலித் பாசம் பொங்கி வழியுது ஈழம்னா கூடவே இசுலாமிய பாசமும்… ஆனா உனா உத்தமபுரம் கண்டதேவி இரட்டைக்குவளைனு கூவுறீங்க அதுல ஒருத்தரு புலிகள் ஏன் கொரல் கொடுக்கலைனு வேகமா கூவுறாரு.. சரி அந்த பிரச்சனை நடக்கும் போது உங்கள் கும்பல என்ன நாடா கடத்துனாங்க.. உள்ளுர்ல தானப்பா இருந்திங்க எதையுமே புடுங்க காணாம் அவன் புடுங்கல இவன் புடுங்களைனு பேச மட்டும் தெரியுது.. தாமரை கவிதை எழுதுதனதுனாலத்தான் சிங்களன் வதை முகாம்ல தமிழன கொடுமைப்படுத்துன மாதிரி வேற எழுத்தித் தொலைச்சுருக்கீங்க.. வேணா உங்க கும்பல மக்கா எல்லாம் சிங்களனுக்கும் மனிதாபிமானி ராஜபக்சேவுக்கும் அவர்களுக்கு ஆயுதமும் ஆதரவும் வழங்கிய சோனியா கருனாநிதி கும்பலுக்கு ஒரு வாழ்த்துப்பாவும் பரணியும் பாடுனீங்கன்னா முகாம்ல இருக்கும் தமிழன விடுதலை பண்ணிடுவாங்க அப்பால யாரும் காணப்போகமாட்டங்க எந்த தமிழச்சியும் கற்பழிக்கபடமாட்டா முதல்ல அந்த வேலையைப்பண்ணுங்க சுகுணா.. உங்களுக்கு தமிழினத்தலைவர் பட்டம் கொடுத்துடலாம்.
முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றுனதைப்பற்றி எத்துன வாட்டி பேசுவீங்க ஒரு போராளி அமைப்பு ஆரம்பல கால பதட்டத்தில் செய்யும் சில தவறுகள்( தவறுகள் காலத்தைப்பொருத்தவை) வைத்து ஒட்டு மொத்த போராட்டத்தையும் கொச்சைபடுத்தி அது மட்டும்தான் பிரச்சனை என பிரச்சனையை மடை மாற்றம் செய்து நானும் அறிவுஜிவி அறிவுஜிவினு வடிவேலு பாணிலு கூவும் உங்களப்பார்த்த பாவமா இருக்கு சுகுணா. இருக்குறவனை எல்லாம் சவடிச்சு கோவணத்தையும் உருவுனப்பிறகு தமிழ்ல தேசிய கீதம் இருக்குற பெருமைய சொன்னாராம் சுகன்.. யோவ் உங்களுக்கு மானம் வெட்கமே கிடையாதய்யா..
சுகுணா திவாகரின் கட்டுரையின் மொத்த சாரம்சம் என்னனா இப்போ யாரும் சிங்களனையோ இந்தியாவையோ கலைஞரையோ சோனியா அம்மையாரையோ எதிர்த்து பேசமா வாழ்த்துப்பா மட்டும்தான் பாடனும் .. இவுக 15 ஆண்டுகளாக( எண்ணிக்கை விளையாட்டுக்கெல்லாம் சுகுணா வரமாட்டாரு) சொன்ன மாற்றுக்கருத்துக்களை பிரபாகரன் எத்துகிட்டாருன்னா தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும், பிரபாகரனுக்கு அரசியல் தெரியாது,புலிகள் போரட்டம் வெறும் ஆயுதப்போராட்டம் அது புரட்சியில்லை. சோபாவும் அ.மார்க்ஸும் தான் உண்மையான புரட்சிவாதிகள் அவர்கள் பண்ணுவதுதான் புரட்சி.. ஈழத்துல உண்மையான பிரச்சனை தேசியத்திற்கான பிரச்சனையில்லை தலித் இஸ்லாமிய பிரச்சனை மட்டும்தான் இருக்கு மத்ததெல்லாம் கிடையவே கிடையாது இல்லையா? அடிங் கொய்யால…எப்படிய்யா உங்களால மட்டும் இப்படியேல்லாம் யோசிக்க முடியுது
தமிழர்களிடம் இருந்து இசுலாமியர்களை அவர்களுக்கு தெரியாமலே பிரித்த இஸ்ரேலின் மொசார்ட் உளவு அமைப்பின் சதி பற்றியும் அதற்கு உடன் போன முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லலித் முத்தலிப்பைப் பற்றியும் சுகுணாவுக்கு தெரியாதா? இல்லை தான் கட்டமைக்கும் முற்போக்கு மார்க்ஸிய பிம்பத்திற்கு இதெல்லாம் இடைஞ்சல் என தவிர்கிறாரா? இவ்வளவு கேள்வி கேட்கும் சுகுணா & கோ புலிகளில் வசம் இருந்து பறிக்கப்பட்ட யாழ்பாணத்தில் முசுலிம்களை மீள் குடியேற்ற எந்த நடவடிக்கையையும் மேற் கொள்ளாமல் (முசுலிம்களீடம் புலிகள் மீதான வெறுப்பை தக்க வைக்க) சிங்கள அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது பற்றியும் அதைப்பற்றி வாயே துறக்காமல் இருக்கும் முசுலிம் அமைப்புகளையும் ஏன் விம்ர்சிப்பதில்லை அப்படி விமர்சிச்சா உங்கள் சிறுபான்மை ஆதரவு முற்போக்கு பிம்பம் சிதைந்திடும் என்ற பயமா?
புலிகள் தமிழர்களை மிரட்டி தங்களுடன் அழைத்துச்சென்றார்களாம் யோவ் அங்க அங்க குண்டு மழை பொழிஞ்சுகிட்டு இருக்கு புலிகளோ சில ஆயிரம் பேர் அவுக எப்படிய்யா லட்சக்கணக்கான தமிழர்களை துப்பாக்கி முனைல கூட்டிட்டு போக முடியும் மூளைய சோ.பா. அ.மாவுடன் சேர்ந்து பார்ல அடகு வச்சிட்டீங்களா? அதுவும் தமிழ்ர்களை துணை பிணமாக்குனாங்க பிரபாகரனுக்கு அரசியல் தெரியாது அப்படி இப்படினு செம்ம பேத்தல் வேற.. அரசியல் தெரியாமல 10 ஆண்டுகளுக்கு மேல் தனி அரசாங்கமே நடத்துனாங்க.. புலிகள சரியான அரசியல் பார்வையாலும் அதன்சார் ராணுவ வெற்றியாலும் தான் டட்லி சேனநாயக தொடங்கிய தமிழ் நில ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது இல்லைனா இலங்கைல தமிழன் எல்லா இடங்களிலும் சிறுபான்மையினராய் மாறி ஈழமே இருந்திருக்காது.. பிரபாகரனுக்கு அரசியல் தெரிந்ததால்தான் அது இந்தியா உட்பட எந்த நாட்டையும் விமர்சிக்கவில்லை உலக அரசியல் ஒரு வட்டத்தைப்போன்றது காலம் எல்லா முடிவுகளை மாற்றிக்கொண்டே செல்லும் அந்த அரசியல் அறிவு இருந்தனால்தான் இத்தனை ஆண்டுகளாய் புலிகளின் போராட்டம் வலிமையுடன் இருந்த்து. இப்போது வீழ்ச்சிதான் ஆனால் மறுபடியும் எழுவோம்…
மத்தபடி நெடுமாறன் மணியரசன் போன்ற காமெடி பிஸுங்களுகும் அவர்களின் மொன்னையான சாதிய திமிருடன் கூடிய அரசியலுக்கும் இன அழிப்பில் எந்த அளவு பங்குண்டோ அந்த அளவு விமர்சனம் என்ற பெயரில் போராளிகளையும் போராட்டத்தையும் கொச்சைபடுத்தும் உங்கள் குமபலுக்கும் உண்டு ”
” தோழர்களே! இறுதிநாட்களில் கொல்லப்பட்ட வன்னி மக்களின் பிணங்களின் மீது சிந்தியுங்கள்! நண்பர்களே, நீதியின் பேராலும் அன்பின் பேராலும் ஜனநாயகத்தின் பேராலும் யோசியுங்கள்! “” இந்த மாதிரி அரைவேக்காட்டு அறிவுஜிவி வேசம் போடும் சுகுனா சுகன் அ.மார்க்ஸ் சோ.பா கூட்டணியின் மடைமாற்றும் அரசியலில் விழிப்புடன் செயல்படுங்கள்
தமிழீழம் மலரும் தருதலைகள் வீழும் அதைக்காலம்சொல்லும்
உயிர்இங்க் மனுஷக்குட்டியும் சாக்கடைப்பன்றியும்

இணைய இலக்கிய போனிக்காக தங்களுக்குள் பேசி வைத்து சண்டைபோடும் இலக்கிய பொறுக்கிகளின் விளம்பர அட்டகாசம் இலக்கியத்தை சாக்கடையாக்கி அதில் புரண்டு எழும் பன்றிகளை போன்றது. இவர்களுக்கு கொள்கையும் கிடையாது கோட்பாடும் கிடையாது குறைந்தபட்சம் இவர்களுக்கு இலக்கியம் கூடத்தெரியாது.
கணட நாவல்களையும் எழுத்துக்களையும் இணையத்தில் மேய்ந்து அதை தமிழில் சாணியாக வெளித்தள்ளும் சாக்கடைகள் இவர்கள் இதில் ஒரு சாக்கடைப்பன்றியை முதலில் பார்ப்போம்.
பேரப்பாரு மனுசக்குட்டி மத்தவன் எல்லாம் மிருகத்துக்கு பிறந்த மாதிரி.. தமிழின் மிகப்பெரிய இலக்கிய தாதாவும் பிரபல இலக்கிய புரோக்கரின் ”கால” வாரிய கனவான் இவர். இவர் பொழப்புக்காக என்ன வேணாலும் செய்வார் யார் காலையும் நக்கிக்குடிப்பார். காலைக்குடுத்தவன் தான் பாவம். நொண்டி நாய் என்று பாராட்டுப்பத்திரம் வாசித்த சொறி மோகனிடமே அவன் எடுத்த வாந்தியை நூலாக்கி சம்பாதிப்பதற்காக எச்சில் ஒழுக வாலை ஆட்டியவர் ஆட்டிக்கொண்டிருப்பவர்.
கா.சு. கொண்ணன் கும்பலிடம் அவர்கள் போட்ட சோத்துக்காக அவர்கல் செய்த எல்லா கழிசடைத்தனங்களுக்கும் நியாயப்படுத்திய விசுவாச சாட்சி அவர். பாபர் மசூதி இடித்தது சரி என்று ஆர்.ஸ்.ஸ் அம்பிகள் எழுதிய கட்டுரையை கூச்ச நாச்சமின்றி( அதெல்லாம் இல்ல) பிரசுரித்தவர்.
முகஸ்துதி முதுகு சொறிதல் பல்லிச்செட்டி ஸ்பான்சர் (மாமா சாரு உபயம்) ஓசிச்சாரயம் கழிசடை ஹாசன்களின் நட்பு போன்றவற்றோடு இணைந்து கழிசடை இலக்கியங்களை? படைப்புகளாக உருமாற்றி சிறுபத்திரிக்கையாக வெளியிடும் அற்பவாதி இவன் சுஜாதாவை பாரட்டுவான் சொறி மோகனிடம் செருப்படி வாங்குவான் அவன் காலை நக்குவான் ’மாம’ சாருவைத்திட்டுவான் அவனிடம் எச்சி சாராயம் வாங்கி நக்குவான்.
சுனா ராமசாமியுடன் குலாவுவான் பின்பு காலைவாருவான் பின்பு அவன் எழவில் சாரி சார் சாரி சார் என்று புலம்புவான். தீவிர அரசியல் பேசுவான் அரசியல்வாதி கவிஞ்ர்களிடம் நூலக ஆர்டருக்காக காலில் விழுவான் கொஞ்சம் கஷ்டம் தான்.
இவனையும் நக்கிபிழைக்கும் அல்லகைக்கூட்டம் உருவாக்கிய இலக்கிய தாதா இமேஜயை நம்பி வரும் நிறைய பெண் எழுத்தாள்ர்கள் வருவார்கள் ஆனால் சிறிது காலத்தில் விட்டால் போதும் என்று ஓடிவிடுவர். ஏனென்றால் இந்த மனுஷக்குட்டிக்கு பெரிய மன்மதக்குஞ்சுனு நினைப்பு நினைப்புத்தான் பொழப்பைக்கெடுக்கும். தமிழ்நாட்டில் அதிக பெண் எழுத்தாள்ர்களுக்கு இந்த அனுபவம் உண்டு. லொல்லியிடமும் செல்லியிடமும் காண்பித்த அல்லது கற்றுக்கொண்ட வித்தையை அனைவரிடமும் இவன் கட்டமைக்க முயல்கிறான். மொத்தத்துல எழுத்தை விபச்சாரமாக்கி வியாபரம் பண்ணும் இவர்களின் சாக்கடை நாற்றம் தொடரும்
தமிழ் தேசம் ஒழியட்டும் பார்பனியம் வெல்லட்டும்
தமிழ் தேசம் ஒழியட்டும் பார்பனியம் வெல்லட்டும்
தமிழ் தேசியவாதிகள் சாதியவாதிகளாக இருப்பதாகவும் தமிழ் தேசியம் பேசுபவர்கள் பெரு முதலாளிகளாக இருப்பதாகவும் ஈழத்தில் சண்டை போடத்தெரியாமல் சண்டை போட்டதாகவும் கண நேரமும் துப்பாக்கியும் கையுமாய் இந்திய ஏகாதிபத்திய அரசை எதிர்த்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும் மரியாதைக்குறிய ம.க.இ.க( மருதையன் கலை இலக்கிய கழகம்) காரர்கள் சமிபகாலமாக பேசத்தொடங்கி உள்ளார்கள்

”எவன் பொண்ட்டாட்டி எவனோடு போனாலும் பூசாரிக்கு தேவை தட்சணை” அப்படி எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும் அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ மருதையன் கலை இலக்கிய கழத்துக்கும் அதை வால் பிடித்து அடையாளம் தேடும் சில ’புரட்சிகர’ எழுத்தாளர்களுக்கும் சரியாப்பொருந்தும். ஈழத்தமிழர்களுக்கு( எங்கள் தொப்புள் கொடி உறவு) ஆதரவாய் தமிழ் நாடு முழுக்க போராட்டம் நடந்த போது ’எங்க அடிக்கிற’ அலையில காணம போய்டுவோம்ணு தங்கள் புள்ள புடிக்கிற வேலைய அங்கிருந்து ஆரம்பிச்சாங்க ( முத்துக்குமாரின் சாவு வீட்டுலை கூடுன இளைஞர்களை கவர அங்க நடத்துன கூத்து சரியான காமெடி பீஸூங்கோ) வந்த புள்ளைகள் எல்லாம் விவரமா இருந்ததுனால அவங்க பருப்பு எங்கையும் வேகல..
தங்கள் அரசியல் ஞான புளுகு மன்னிக்கவும் புரட்சி ஏட்டில் ஈழத்தமிழர்கள் வேறு இனம் தமிழகத்தமிழர்கள் வேறு இனம் என்ற புதிய கண்டு பிடிப்பை இந்த கும்பல் கண்டு பிடிச்சிருக்கு. ஒரு வேலை நோபல் பரிசு கொடுப்பவனுக்கு தெரிஞ்சுட்டா இந்த ஆண்டுக்கான சமுகவியலுக்கான நோபல் பரிசு நம்ம கும்பலுக்குத்தான்( நோபல் பரிசு பன்னாட்டு பரிசு ஆச்சேனு அதையும் ஏத்துக்க மாட்டாங்க ஆனா எங்கையோ இடிக்குது என்னடானு கேட்டா நம்ம உளவுத்துறை அதை வாங்கி கொடுக்கிறது நம்ம பொறுப்புங்குறான் எப்பவும் கட்டுன பொண்ட்டாடியை விட கள்ள பொண்ட்டாட்டி உறவு தானே பெரிசு அது தான் உளவுத்துறை உறவு மட்டும் எப்பவுமே தொடருது) சரி விஷயத்துக்கு வருவோம். உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடச் சொல்லுற இவுங்கா உள்ளுர்த் தமிழன் ஒன்றுபட்ட மட்டும் சிக்கல் போல
தமிழ் தேசியம் பேசுறவுங்கள்ள சில பயபுள்ளைக சாதித்திமிறோட இருக்காங்கிறது உண்மைதான்.. அதுக்காக தமிழ்தேசியமே தப்புங்கிறது மார்க்ஸியம் பேசுற ம.க.இ.க தப்புங்கிறதானல மார்க்ஸியமே தப்புங்கற மாதிரில்ல ஆயிடும். சாதியத்த இப்படி பெடல் எடுக்கிற நம்ம ம.க.இ.காவிக்கு நம்ம வாழ்த்துக்கள். ஆனால் வாழ் நாள் முழுவதும் சாதி இழிவுக்காக போராடுன அம்பேத்காரையும் பெரியாரையும் இரட்டை மலை சினிவாசனையும் மருதையன் கலை இலக்கிய கழகத்துக்கு ஏன் பிடிக்காம போச்சுனு தெரியல ஏன்னா அம்பேத்காரு தொழிலாளர்களை சொரண்டுறது இந்த கம்யுனிஸ்ட்கள் தான்னு போட்டு ஒடச்சதுன்னாலையோ என்னமோ பெரியாருட்டையும் இவங்களுக்கு சிக்கலு ஏன்னா பெரியாரு பெரு முதலாளி ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் புரியல தமிழ் தேசியவாதிகளை திட்டும் போது மட்டும் ம.க.இ.காவின் அடிவருடி எழுத்தாளர்கள் ஏன் பெரியாருக்கு கிட்ட மட்டும் ”மதி” மயங்கி கிடக்குறாங்கனு தெரியல ஒரு வேலை இது தான் ராஜ தந்திரமோ?
ராணுவச்சண்டை பத்தி வாயும் ……………ம் கிழிய அளவு நியாயமான விமர்சனம்கிற பேருல இவனுக பண்ணுற அலப்பற தாங்க முடியல. முதல்ல எல்லாம் கிழிய இந்திய தேசியம் பேசுற இவனுக நொடிப்பொழுதும் இமையாம துப்பாக்கியும் கையுமா இந்திய மொதலாளிகளுக்கு எதிரா துப்பாக்கி சண்டை போடுற இவனுக புலிகள் போடுற ராணுவச்சண்டைபத்தி பேச எந்த அருகதையும் இல்ல எழுதுற எழுத்தாளனுக்கு பேனா கிடச்ச எதையும் எழுதலாம்கிற கொஞ்சம் மாத்திக்கட்டும்..ஆனா ஒன்னே ஒன்னுங்க எந்த பெரியாரை வச்சு தமிழ் தேசிய வாதிகளை கொறை சொல்லுறாங்களோ அவர் வார்த்தையில சொல்லுறதுன்னா பாம்ப கண்டாலும் விட்டுடு பார்ப்பான கண்ட அடிங்கிற வார்த்தை இன்னும் சரியாப் பொருந்துது இந்த மருதையன் கலை இலக்கிய கழத்துக்கு. தன்னுடைய இனத்தின் ஆதிக்கம் எங்க ஒழிஞ்சு போயிடும்னு கெட்டிய புடிச்சுக்கிட்டு தான் ஆரியன்னு கூவுற சாதித் திமிரு சூப்பரோ சூப்பரு…
தமிழ் தேசியம் ஒழியட்டும், பார்பனியம் வெல்லட்டும்
ஜார்ரே ஜகாங்கே அச்சா ம.க.இ.காவா இல்ல கொக்கா
அம்மணக்காந்தியை ஆயிரம் கோடிக்கு
அம்மணக்காந்தியை ஆயிரம் கோடிக்கு
குருதிக்கறையை கழுவ
நீண்ட வரிசையில் நான்
பற்களில் படிந்த இரத்தக்கறையை
கழுவ என் முன்னால் நின்ற காந்தி
தன் கோவணத்தை தேடியபடியே
தன் தடியை தவறவிட்டார்
கந்தக நெடி பரவிய விழிகளுடன்
பிணவாடை சுமந்த புத்தனோ
தன் சாம்பல் குவியலை காந்தியின்
கோவணத்தில் கவனமாய் மறைத்தார்
காந்தியின் தடியை களவாடிய
ஊடகங்களோ ஒளிபரப்பின
அம்மணக்காந்தியை ஆயிரம் கோடிக்கு…
அண்ணா அறிவாலயத்தை கடந்த போது

இன்றைய வெக்கை மிகுந்த பின் காலைப்பொழுதில் அண்ணா அறிவாலயத்தை கடந்த போது வாகன நிரிசலில் சிக்கி வெயிலில் வறுபட்ட கொடுமையைவிட தள்ளாத வயதில் பிறந்த நாள் கொண்டாடும் கருணா & கோ வின் கொண்டாட்ட உண்ர்வுதான் மனதை பிழிவதாய் இருந்த்து. 20,000 தமிழர்கள் இறந்ததாய் ஐ.நா பொதுச்செயலாளரே ஒத்துக்கொண்ட வேளையில் இவர்களின் தொடர் கோலாகலம் சகிக்க முடியவில்லை..

ஈழத்தின் கருகி தமிழர்கள் செத்து அவர்களது பிணம் கூட முழுமையாய் அழுகி இருக்காது.. கொத்துக்கொத்தாய் சிறுவர்களும் தாய்மார்களும் இளைஞர்களுமாய் செத்து பிணமாய் நம்மை உறுத்திக்கொண்டு இருக்கும் வேளையில்.. அகதி முகம்கள் என்ற திறந்த வெளிச்சிறையில் நம் சொந்தங்கள் சாப்பாட்டிற்கு கையேந்தி பட்டினியால் வாடும் அவல நிலைக்கு நடுவில், 6 கோடித்தமிழ்ர்களின் முதல்வர் இங்கே தம் பையனுக்கு முடி சூட்டியும் தள்ளாத வயதிலும் வீல் சேரில் பிறந்தநாள் கொண்டாடுவதும் சகிக்க முடியவில்லை.. ஈன இனத்தில் பிறந்து விட்டோமோ என்று குத்திக் காண்பிக்கிறாரா கலைஞர்?
கைக்கெட்டும் தூரம் எம் தமிழன் கொத்துக்கொத்தாய் கருகிக்செத்த பிணவாசனை சுமந்து நீங்க பெற்ற வெற்றியின் பூரிப்பா கலைஞ்ர் அவ்ர்களே…. பணமும் வெற்றியும் குடும்பமுமாய் அண்ணாவையும் பெரியாரையும் போஸ்டரில் ஒரு முலையில் போட்டு கிருஷ்னண் வேசம் தரிப்பவர் தானே நீங்கள்
அறிவு ஜீவி அபத்தம் அ.மார்க்ஸ்

தீராநதி போன்ற இதழ்களில் பேசாப்பொருளை பேசும் அ.மார்க்ஸ் ஈழப்பிரச்சனையில் மட்டும் பட்டும் படாமல் பேசுவது மட்டுமல்ல தன் அறிவி ஜீவி அபத்ததையும் சேர்த்து பேசுகிறார். போஸ்னியா முதல் ஈராக் வரை வாய் கிழிய பேசிவரும் அ.மார்க்ஸ் காஷ்மீரிகளின் சுயநிர்ண்ய தனி நாட்டு போரட்டத்தின் நியாயத்தையும் அதன்சார் ஏற்படும் வன்முறையையும் வன்முறை நிகழ்த்தும் போராட்ட இயக்கங்களையும் விமர்சனத்திற்கு உட்பட்டோ அலலது விமர்சனமின்றியோ நியாயப்படுத்தி அரச பயங்கரவாத்தை எதிர்க்க துணியும்( காகிதத்திம் மட்டும்) அ.மார்க்ஸ் வகையறாக்கள் ஈழப்பிரச்சனை என்ற உடன் புலிகள் புலிகள் என்று கூவுவது ஏன்?
உலகத்தின் இந்தியாவின் முலை முடுக்கெல்லாம் நிகழ்ப்வை பற்றி எல்லாம் பக்கம் பக்கமாய் இணையத்தில் மேய்ந்து எழுதிக்குவிக்கும் அ.மார்க்ஸ் நமக்கும் மிக அருகாமையில் நமது தொப்புள் கொடி உறவை கழுவறுக்கும் சிங்கள் அரசு பயங்கரவாதத்தையும் அதற்கு துணை போகும் இந்திய எகாதிபத்தியத்தையும் தோலுரிக்க அதே விரியத்துடன் எழுதாதது ஏனோ? ஒரு வேளை ஈழமும் இஸ்லாமியர்களின் தேசமாக இருந்திருந்தால் நம்ம அ.மார்க்ஸ் பொங்கி எழுதி குவித்து இருப்பாரோ?
இந்த வார தீராநதியில் பேசாப்பொருளை பேசும் அ.மார்க்ஸ் சோ.பா. சக்தி வாங்கி கொடுத்த சரக்குக்கு விசுவாசமாய் ஈழப்பிரச்சனையை தீவிரமாய் முன்னேடுக்கும் அனைவருக்கும் புலிகளின் முகவர்னு தல பட்டம் கொடுத்திருக்கு. ஈழப்பிரச்சனையை முன்னேடுப்பவர்கள் எல்லாம் புலி முகவர்னா? சோ.பா சக்தியுடன் சேர்ந்து சரக்கடித்து புலிகளை எதிர்க்கும் தாங்கள் எல்லாம் சிங்களவனின் முகவர்களா அ.மார்க்ஸ்…
புலிகளைப்பற்றி தாவு தீர பேசும் அ.மார்க்ஸ் வகையறாக்கள் சிங்கள மதவாத பயங்கரவாத்தையும் இன அழிப்புக்கும் எதிராய் எந்த மாதிரியான இயக்கம் வரும் என்று தெரியாதா? சிறுபான்மை தமிழருக்கு உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் ஆயுதம் தூக்குவது 35 வருடமாய் இயகத்தை கட்டிக்காக்கவும் சில தவறுகள் ஏற்படுவது இயற்கையானது எனபதும் தாங்களுக்கு தெரியாதா? சின்ன சின்ன விடயங்களை வைத்துகொண்டு ஒரு விடுதலை இயக்கத்தை எதிர்ப்பது தனது மேதாவிலாசத்தை நிறுவுவதற்கா? அ.மார்க்ஸ் அல்லது தனது அறிவு ஜீவித்தனத்தை நிறுபிக்க இன உண்ர்வார்கள் அதிகமாக பேசுவதால் பேசாப்பொருளை மட்டும் பேசுபதற்க்காய் கண்மூடித்தனமாக எதிர்க்கிறாரா?
அப்புறம் புலிகள் இந்த தேர்தலில் தவறிழைத்து விட்டதாக அடுத்த கண்டுபிடிப்பையும் உளரி இருக்கிறார் அ.மார்க்ஸ்.அப்படி என்ன தவறு உங்களைப்போன்ற துரோகிகள் அரசாளும் நாட்டில் குறைந்த பட்ச உண்ர்வோடு இருப்பவர்கள் என்ன மாதிரி முடிவெடுப்பார்கள்.எங்களின் முடிவு தூரோகிகளுக்கு பாடம் புகட்டுவதுதான் ஊடக பலம் வாய்ந்த தூரோகிகள் தோற்று எதிர்வரிசையில் அமர்வது பல வகையில் நல்லது. அது தங்களைப்போன்ற அறிவி ஜிவிகளுக்கு புரியாது அல்லது புரியாத மாதிரி நடிப்பீர்கள் எனபதும் எங்களுக்கு தெரியும்.
அடுத்து கொளத்தூர் மணியண்ணனை பற்றியும் உளரி வச்சு இருக்கீங்க.இரட்டைக்குவளை போராட்டம் போல் பல களங்களையும் அதற்க்கு பரிசாய் சிறையையும் கண்டு இனத்திற்காய் போராடும் அவரையும் தனது பதவியையும் சொத்தையும் பாதுகாக்க யார் காலிலும் விழத்தயாராய் இருக்கும் ஈனமீகு வீரமணீயையும் ஒப்பிட்டு உங்கள் அரிப்பை தீர்த்திருக்கீங்க.. உங்களைப்போன்ற காகிதப்புலிகளுக்கு மணியண்ணனைபற்றி பேச எந்த தகுதியும் கிடையாது.. சோ.பா சக்தியுடம் இன்னும் இரண்டு ரவுண்டு அடிச்சீங்கனா இன்னும் அதிகமா அபத்தலாம் அ.மார்க்ஸ்
ஈழ இன அழிப்பின் காரணி, தொடரும் வரலாற்றுச் சோகம்

ஈழத்தின் இன அழிப்புக்கு இன்றைய நிலையில் பன்னாட்டு முக்கியமாய் சின உளவு நிறுவனம் சார்ந்த நிறுவனங்களும் இந்திய பெரும் முதலாளிகளின் வியாபார வேட்கைக்கு களம் அமைத்துகொடுக்க தயாராய் இருக்கும் இந்திய அரசுமே காரணம்.. இந்திய நிறுவனங்கள் வியாபரத்திற்காய் இலங்கையில் சீன உளவு நிறுவங்களுக்கு பொருளாதார அடியாளாக செயல்படும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்த அவலமும் அதன் சார் தென் இந்தியா முழுவதும் அவர்களின் கண்கானிப்பின் கீழ் வந்து விட்டதும் மறுக்க முடியாத உண்மை.. இந்திய அதிகார வர்க்கம் இப்போதைய அரசின் பழிவாங்கும் உண்ர்சிக்கும் பெரு முதலாளிகளின் வியாபார வேடிகைக்கும் அடிபணிந்து இந்தியாவின் மைக்ரோ டிபண்ஸ் நிறுவனங்கள் நிறைந்த தென் இந்திய பிரதேசத்தை கண்கானிக்கும் சீன உளவு நிறுவனங்களுக்கு உதவும் சிங்கள அரசுக்கு உதவி வருவது இந்தியாவிற்கே அபத்தாய் முடியும் என்பதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை
இப்போதைய இன அழிப்புக்கு இனவெறி அரசு+ பன்னாட்டு தரகு நிறுவனங்கள்+ சீன உளவு நிறுவனங்கள்+ அவர்களின் கண்கானிப்பு அரசியலை புறந்தள்ளி இந்திய பெரு முதலாளிகளின் அடியாள்களான இந்திய அதிகாரவர்க்கம்+ அவர்களை தங்களின் பழிவாங்கும் உண்ர்வுக்கு பயன்படுத்தும் காங்கிரஸ் அரசு+ அதற்கு துணைபோகும் தமிழக முதல்வர்+ தமிழக ஊடக சர்வாதிகாரம்+ உண்ர்வற்று இருக்கும் நீங்களும் நானும் இப்படி எல்லாமே காரணம்
வீல் சேர் வில்லனுக்கு ஆப்பு வச்ச ’சொக்கத்தங்கம்’ இத்தாலி காந்தி

லட்சக்கணக்குனல செத்தானுக லட்சகண்க்குல நாடோடியா அடுத்த வேளை சாப்பட்டுக்கு அலைஞ்சானுக அசையல பாஸ் பரஸ்பரஸ் குண்டுல கருகுனாக கலங்கல தமிழச்சியின் பிணத்தைகூட பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குனானுக அப்பல்லாம் ஒரு ருபாய்க்கு அழைப்பை மாத்துன நம்ம செல்போன் தயாநிதியையும் ஸ்பெக்ட்ரம் ராசாவையும் அவமதிக்கும் விதமாக இந்த காலத்துலையும் தந்தியும் கடிதமும் எழுதிய நம்ம வீல் சேர் வில்லன் சொக்கத்தங்கத்திடம் சொக்கி நின்னாப்ல நம்ம அதிரடி அழகிரி பாணில கருப்பு பணத்துல சொக்கத்தங்க தூரோகிக்கு 9 சீட்டு வேற ஜெயிச்சு கொடுத்துபல.
கடைசியா நம்ம நாயகன் டெல்லி போனார். எதுக்காக போனார். கொத்துக்கொத்தா சாகும் தமிழன காப்பாத்தவா இல்லை. எந்த மந்திரி பதவிக்காக தமிழன் சாவுக்கு துணை போனாரோ அந்த பதவியை மனைவி மகனுக்கும் துணைவி மகளுக்கும் அக்கா பேரனுக்கும் வாங்கி கொடுக்க.என்ன நடந்துச்சு சொக்கத்தங்கம் 2க்கு மேல முடியாதுன்னுச்சு என்னடா இது குடுமபத்துல கொழப்பம் உண்டாகுமேனு கெஞ்சி பாத்தாரு.. உன்னால ஆக வேண்டிய காரியம் ஆயாச்சு.. என புருசன் செத்ததுக்காக பல லட்சம் தமிழச்சி தாலியை அறுத்தாச்சு அப்புறம் என்னனு வச்சாங்க ஆப்பு.. நம்மாலு மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாமா விட்டாரு ஒரு அறிவிப்பு.. அடுத்து செயற்குழுவாம்.. செயற்குழுவை விட மத்தியான சாப்பாட்டு மேசை தான் அவருக்கு ரொம்ப கஷ்டம் எந்த ’வீட்டுக்கு போனாலும்’ பொருத்திருப்போம் அடுத்த துரோக காமெடி சீனுக்கு
